உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்துாரில் உள்ள, தெய்வ சேக்கிழார் 27ம் ஆண்டு விழா

குன்றத்துாரில் உள்ள, தெய்வ சேக்கிழார் 27ம் ஆண்டு விழா

குன்றத்துார்: தெய்வச் சேக்கிழார், 27ம் ஆண்டு விழா, குன்றத்துாரில் உள்ள சேக்கிழார் கோவிலில், வழிபாட்டு நிகழ்ச்சிகளுடன், நேற்று (ஜூலை. 25ல்), துவங்கியது. அடுத்த மூன்று நாள் நிகழ்ச்சிகள், திருவான்மியூரில் நடக்கின்றன.

சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை இணைந்து, தெய்வச் சேக்கிழார், 27ம் ஆண்டு விழாவை நடத்துகின்றன. இவ்விழா, நான்கு நாள் நடக்கிறது.துவக்க நாளான நேற்று (ஜூலை. 25ல்), சேக்கிழார் பிறந்த, குன்றத்துாரில் உள்ள, சேக்கிழார் கோவிலில், காலை, 10:00 மணிக்கு, அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

தொடர்ந்து, பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.இதில், ஊரன் அடிகளார், கோவை சிவப்பிரகாச சுவாமிகள், சேக்கிழார் ஆராய்ச்சி மைய செயலர், மோகன், துணை செயலர், ராஜாராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அடுத்த மூன்று நாள் நிகழ்ச்சிகள், திருவான்மியூர், ஸ்ரீ ராமச் சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கின்றன.இதில், முக்கிய நிகழ்வாக, திருவான்மியூர், திரிபுர சுந்தரி - மருந்தீஸ்வரர் கோவிலில் இருந்து, யானை வாகனத்தில், திருவண்ணாமலை ஆதீனம், ஸ்ரீமத் ஆறுமுக தம்பிரான் சுவாமிகள், பதவுரை செய்த, பெரியபுராணம் நுால், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.சேக்கிழார் விருது மற்றும் சிறந்த நுால்களுக்கான பரிசு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மூன்று நாள் நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்பர்என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !