திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை..
ADDED :2322 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், திருநகர் சித்தி விநாயகர் கோயிலிலுள்ள பைரவர், எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலுள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தீபாராதனைகள் முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மதுரை கீழஆவணி மூல வீதி காலபைரவர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.