ராமேஸ்வரம் ஆடித் திருவிழா: அம்மன் தங்க பல்லக்கில் உலா
ADDED :2374 days ago
ராமேஸ்வரம் : ஆடி திருவிழாவையொட்டி ராமேஸ்வரம் நேற்று ராமநாதசுவாமி கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் வீதி உலா வந்தார். ராமேஸ்வரம் கோயிலில் ஜூலை 25ல் கொடியேற்றத்துடன் ஆடி திருக்கல்யாண விழா துவங்கியது. ஐந்தாம் நாள் விழாவான நேற்று ராமேஸ்வரம் கோயிலில் இருந்து தங்க பல்லக்கில் அம்மன் எழுந்தருளி கோயில் ரதவீதியில் உலா வந்தார்.பின்னர், மூன்றாம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி முன்பு உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.