கொட்டாம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!
ADDED :4957 days ago
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி கடைவீதியில் உள்ள வடக்குப்புற காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. கடந்த ஞாயிறன்று காப்புக்கட்டுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட விழாவின் 8ம் நாளான நேற்று பக்தர்கள் சின்னகொட்டாம்பட்டி அய்யனார் கோயிலிலிருந்து தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் 3 கி.மீ., தூரம் நடந்து வந்து காளியம்மன் கோயிலில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். சிங்கம்புணரி, பள்ளபட்டி, வலைச்சேரிபட்டி உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.