உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திம்மராஜாம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர வளையல் அலங்காரம்

திம்மராஜாம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர வளையல் அலங்காரம்

திம்மராஜாம்பேட்டை:பர்வதவர்த்தினி சமதே ராமலிங்கேஸ்வரர் கோவிலில், நாளை (ஆக., 3ல்), ஆடிப்பூர வளையல் அலங்காரம் நடைபெற உள்ளது.

வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜாம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், ஆண்டுதோறும், ஆடிப்பூர விழா நடக்கும். நடப்பாண்டு ஆடிப்பூர விழா, நாளை (ஆக., 3ல்), நடை பெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு அபிஷே கம், ஆராதனை நடக்க உள்ளது.இரவு, 7:00 மணிக்கு, அம்பாளுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் நடைபெற உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !