உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை பெருமாள் கோயிலில் ஆக.7ல் ஆடித்திருவிழா துவக்கம்

வடமதுரை பெருமாள் கோயிலில் ஆக.7ல் ஆடித்திருவிழா துவக்கம்

வடமதுரை:  சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா ஆக.7–ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டுதோறும் ஆடிமாத பவுர்ணமியையொட்டி இங்கு 13 நாள் திருவிழா நடக் கிறது. இந்தாண்டு திருவிழா ஆக.7  கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிரவு துவங்கி  ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணிக்கு மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடும், அனுமார், அன்னம், சிம்மம், கருடன் என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சிகளாக ஆக.13ல் திருக்கல்யாணம், ஆக.15ல் திருத்தேரோட்டம், ஆக.17–ல் முத்துப்பல்லக்கும் நடக்கிறது. கடந்தாண்டு வரை  இக்கோயில் திருவிழாவிற்கு தென்னங் கீற்றில் மேற்கூரை பந்தல் அமைக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணம் தீவிபத்தை தொடர்ந்து கோயில் விழாக்களில் தென்னங்கீற்று பந்தலுக்கு தடை விதிக்கப்பட் டாலும், வடமதுரையில் அரசு உத்தரவு கடைபிடிக்கப்படவில்லை.

தற்போது வடமதுரை கோயிலில் செயல் அலுவலராக நாராயணி, தக்கார் மகேஸ்வரி என இரு பெண் அலுவலர்கள் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக தகர மேற்கூரை பந்தல் அமைக்கப்படுகிறது.  அத்துடன் கோயில் திருவிழா நடவடிக்கைகளிலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !