பொள்ளாச்சி தெப்பத்தேர் வைபவம்! தெப்பக்குளத்தை தூர்வாரி மீட்க பணி தீவிரம்
பொள்ளாச்சி:கழிவுகளால், பாழாகியிருந்த தெப்பக்குளத்தை துார்வாரி, தெப்பத்தேர் வைபவ த்தை நடத்துவதற்கான, பணிகளை பொள்ளாச்சி நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர் துவக் கியுள்ளது அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் உள்ள கழிவுகளை அகற்றவும், துார்வாரி மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து வைக்கவும், ’பொள்ளாச்சி நீர்நிலைகள் புனரமைப்பு குழு’ அமைக்கப்பட்டுள்ளது. ’வாட்ஸ் ஆப்’ குழு துவங்கப்பட்டு, அதன் மூலம் தன்னார்வலர்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
இக்குழுவின் முதற்கட்ட பணியாக, பொள்ளாச்சி தெப்பக்குளம் துார்வார முடிவு செய்யப் பட்டது. அதன்படி, நேற்று (ஆக., 4ல்) தெப்பக்குளம் துார்வாரும் பணி காலை, 7:00 மணிக்கு துவங்கப்பட்டது.இப்பணியில், சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என பலரும் ஆர்வமாக பணி செய்ய களம் இறங்கினர். தெப்பக்குளத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள முட்புதர்கள், செடி களை அகறறினர். மேலும், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்கள் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்தி சாக்குப்பைகளில் சேகரித்தனர். தெப்பக்குளம் அருகே உள்ள கோவில் வளாகத்தையும் சுத்தம் செய்தனர். தொடர்ந்து, தெப்பக்குளத்தில் உள்ள நீரில் இருந்த கழிவுப் பொருட்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பிளாஸ்டிக் குழாயை இரண்டாக வெட்டி, அதனை கயிறு கொண்டு கட்டினர். பின்னர், குளத் தின் இரண்டு புறமும் கயிற்றை இழுக்க ஆட்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். குளத்தில் போடப் பட்ட குழாயை கட்டப்பட்ட கயிறை மெல்ல இழுக்க, கழிவுகள் கரைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, அதனை அள்ளும் பணியில் குழுவினர் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர் கூறியதாவது:குழுவின் முதற்கட்ட பணியாக தெப்பக்குளம் துார் வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் துார்வாரப்பட்ட கழிவுகள் சாக்குப்பைகளில் சேகரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கப்படும். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, 7:00 முதல், 9:30 மணி வரை துாய்மைப்பணி நடைபெறும்.
பல ஆண்டுகளாக தெப்பக்குளம் துார்வாரப்படாததால் தெப்பத்தேர் வைபவம் நடத்தப்படாமல் உள்ளது. இந்தாண்டு மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, தெப்பத்தேர் வைபவம் நடத்தும் வகையில், தெப்பக்குளம் சுத்தப்படுத்தப்படும்.குளத்தில் உள்ள கழிவுகள் அகற்றப் பட்ட பின்னர், சேறு, சகதிகள் துார்வாரப்பட்டு தண்ணீர் துாய்மையாக பராமரிக்க திட்டமிடப் பட்டு, கழிவுகளை வீசாமல் இருக்க பாதுகாப்பிற்காக வலை அமைக்கப்படும்.
தெப்பக்குளம் துார்வாரும் பணி இன்னும் சில வாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய துள்ளது. ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் முன்வர வேண்டும். குளத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்கு அனைவரது ஒத்துழைப்பும் கிடைத்தால் மேலும் பயனாக இருக்கும். இக்குழுவில் இணைய விரும்புபவர்கள், 91500 05958, 78240 14031 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.