கிருஷ்ணகிரி ஆதிபராசக்தி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
ADDED :2298 days ago
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே உள்ள, பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளியில் உள்ள மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவில், மண்டல பூஜை நிறைவு விழா நேற்று (ஆக., 4ல்)நடந்தது.
இதையொட்டி, நேற்று (ஆக., 4ல்) காலை, 9:30 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தன. தொடர்ந்து வினாயகர் கோவிலிலிருந்து பெண்கள் பால் குடங்களை எடுத்து ஊர்வல மாக கோவிலுக்கு சென்றனர். பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு, 108 சுமங்கலிகள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.