உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி மஹா சக்திமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ஆடிப்பூர விழா வழிபாடு

கிருஷ்ணகிரி மஹா சக்திமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ஆடிப்பூர விழா வழிபாடு

கிருஷ்ணகிரி: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, மஹாசக்தி மாரியம்மன், பட்டாளம்மன் கோவில் களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

கிருஷ்ணகிரி தியாகி தங்கவேல் கவுண்டர் நகரில் உள்ள, மஹாசக்தி மாரியம்மன் கோவி லில், 13ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று (ஆக., 4ல்) நடந்தது. காலை, 5:00 மணிக்கு வேதபாராயணம், நவக்கிரக ஹோமம், ருத்ர ஹோமம், கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது.

பின்னர், கலசாபிஷேகம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம், வளையல் அலங்காரத்துடன் உச்சிகால பூஜை நடந்தது. அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதே போல், ஆடிப்பூரத்தையொட்டி, கிருஷ்ணகிரி ராஜாஜி நகரில் உள்ள தேவி பட்டாளம்மன் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதில், கூழ் ஊற்றுதல், மாவிளக்கு மற்றும் தீச்சட்டியை எடுத்துக் கொண்டு உற்சவர் நகர் வலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அனைவரு க்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !