பொம்மிடி அருகே, ஆடிப்பெருக்கு விழா:தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
பொம்மிடி: பொம்மிடி அருகே, பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக் கடன் நிறைவேற்றினர்.
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த பையர்நத்தத்தில் வசிக்கும் குருமன்ஸ் இன மக்கள், வீரபத்திர சுவாமியை குலதெய்வமாக வழிபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஆடிப்பெருக்கு நாளில், அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு வீரபத்திர சுவாமியை எடுத்து சென்று சிறப்பு பூஜை செய்கின்றனர். பின், கத்தி கழுவுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அடுத்த நாள் காலை தங்கள் முன்னோர்களை வணங்கி விட்டு, பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம். அதன்படி, நேற்று (ஆக., 4ல்) வீரபத்திர சுவாமிக்காக, பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். காலை, 10:00 மணிக்கு கோவிலிலிருந்து, வீரபத்திர சுவாமி மற்றும் சித்தப் பன், ஜடையப்பன், பாவாடராயன், தொட்டிலிபீரம்மாள், பட்டக்காரன், குப்பதப்பன் உள்ளிட்ட சுவாமி சிலைகளை அப்பகுதியில் உள்ள, பெரிய ஏரிக்கு ஊர்வலமாக மக்கள் எடுத்து வந்தனர். அங்கு, சிலைகளுக்கு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பின், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.