உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் அருகே அம்மச்சியம்மனுக்கு 10,000 வளையல்களால் அலங்காரம்

நாமக்கல் அருகே அம்மச்சியம்மனுக்கு 10,000 வளையல்களால் அலங்காரம்

நாமக்கல்: நாமக்கல், சின்னமுதலைப்பட்டி அமச்சியம்மன் கோவிலில், ஆடி பூரத்தை முன்னி ட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, நாமக்கல் சுற்று வட்டாரத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

சின்னமுதலைப்பட்டியில் உள்ள அமச்சியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா கோலாகலமாக நடந்தது. அதை முன்னிட்டு நேற்று (ஆக., 4ல்) காலை, 6:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், குங்கு மம் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு. 10 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !