பவானி, லட்சுமி நகர், மாகாளியம்மன் கோவிலில் ஆடிப்பூர நட்சத்திர யாகம்
ADDED :2298 days ago
பவானி: பவானி, லட்சுமி நகர், மாகாளி அம்மன் கோவிலில், உலக நலன், மக்கள் வளமுடன் வாழ, ஊர்மக்கள் சார்பாக, ஆடிப்பூர நட்சத்திர யாகம் நடந்தது. இதை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு யாகங்கள் செய்து, சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பவானி, ஈரோடு, காளிங்கராயன்பாளையம், லட்சுமி நகர் பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.