கீதை காட்டும் பாதை
ADDED :2284 days ago
ஸ்லோகம்
அஹங்காரம் பலம் தர்பம்
காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:!
மாமாத் மபரதே ஹேஸு
ப்ரத்விஷ்தோப்ய ஸூயகா:!!
தாநஹம் த்விஷத: க்ரூராந்
ஸம்ஸாரஷேு நராத மாந்!
க்ஷிபாம்ய ஜஸ்ரம ஸுபாந்
ஆஸுரீஷ்வேவ யோநிஷு!!
பொருள்: அகந்தை, உடல் பலம், ஆசை, கோபம் இவற்றால் மற்றவரை இகழ்ச்சியாக கருதுபவர்கள் தங்கள் உடலிலும், மற்றவர்களின் உடலிலும் அந்தர்யாமியாக (உள்ளிருப்பவர்) இருக்கும் கிருஷ்ணராகிய என்னையே வெறுக்கின்றனர். கொடிய பாவிகளும், இழிவான மனநிலையும் கொண்ட அவர்களை மீண்டும் அசுரப்பிறவியில் தள்ளி விடுவேன்.