திருப்பூர் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை வழிபாடு
ADDED :2258 days ago
திருப்பூர்:திருப்பூர் அர்த்தசாம பூஜை சிவனடியார் திருக்கூட்டத்தினர் சார்பில், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடந்தது.
அவிநாசியில், முதலை உண்ட பாலனை மீட்டது; திருமுருகன்பூண்டியில், வேடுபறி மூலமாக இறைவன் திருவிளையாடல் நிகழ்த்தியது குறித்து, பாடல்கள் பாடப்பட்டன.மாலையில் நடந்த பூஜை நிகழ்ச்சியில், சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவர், வெள்ளை யானை வாகனத்தில் எழுந்த ருளி, எம்பெருமானை வலம் வந்தார்.
அவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில், குரு பூஜை விழா நடந்தது. தம்பிரான் தோழருக்கு சிறப்பு அபிேஷகம், அவி நாசி தேவாரம் பாராயணம் செய்யப் பட்டன. சிவனடியார்களுக்கு மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு, அமுது படைக்கப்பட்டது.