உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார் உருகாதேஸ்வரி அம்மன் கோவிலில் ஓலையக்கா நோன்பு நோற்று வழிபாடு

அன்னுார் உருகாதேஸ்வரி அம்மன் கோவிலில் ஓலையக்கா நோன்பு நோற்று வழிபாடு

அன்னுார்:செட்டிபாளையம், உருகாதேஸ்வரி அம்மன் கோவிலில், கன்னிப்பெண் குழந்தை கள் பங்கேற்ற சிறப்பு வழிபாடு நடந்தது.

பல ஆண்களுக்கு முன்பு மதமாற்ற கட்டாயத்திலிருந்து தப்பிக்க, கர்நாடகாவிலிருந்து தமிழகம் நோக்கி வந்த சில குடும்பங்களை சேர்ந்த பெண் குழந்தைகள், சமூக விரோதிகளி டமிருந்து, கற்பை காக்க, அப்பகுதியில் ஆற்றங்கரையில், தீ மூட்டி, தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். அவர்களை நினைவு கூறும் விதமாக, உம்மத்துார் உருகாதேஸ்வரி அம்மன் கோவில் அன்னுார் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் அமைந்துள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் முந்தைய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், ஓலையக்கா நோன்பு, தாசபளஞ்சிக சமூகம் சார்பில், கொண்டாடப்படுகிறது.நேற்று முன் தினம் (ஆக., 6ல்) இங்கு செல்வ விநாயகர், உருகாதேஸ்வரி அம்மன், மாகாளியம்மன் சன்னதியில், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, ஹோமம் நடந்தது. பனை ஓலையால் அம்மன் உருவம் செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருந்தது.

கன்னிப்பெண் குழந்தைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, ஓலையக்கா நோன்பு நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளுக்கு வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், சீப்பு, கண்ணாடி, துணிகள் அடங்கிய சீர் வரிசை வழங்கப்பட்டது.குழந்தைகளை அம்மனாக பாவித்து தீபாராதனை காண் பிக்கப்பட்டது, மதியம் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாசபளஞ்சிக சமூகத்தின ரும், பொதுமக்களும் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !