ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமிக்கும் திருஷ்டி
ADDED :2253 days ago
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தினமும் திருஷ்டி சுற்றும் வழக்கம் உண்டு. கண் படக்கூடாது என்பதற்காகவும், சுவாமி மீதுள்ள அன்பின் காரணமாகவும் இதைச் செய்கின்றனர். கோயிலில் உள்ள நாலு கால் மண்டபத்தில் இந்தச் சடங்கு நடக்கிறது. ’திருவந்திக்காப்பு’ என இதைச் சொல்வர். சிறிய குடத்தின் மீது கிண்ணம் ஒன்றை வைத்து, அதில் கனமான திரியிட்டு தீபமேற்றிக் காட்டுவர்.