கவர்ச்சியில் மயங்காதீர்கள்
ADDED :2326 days ago
சைரன்ஸ் என்னும் தீவில் வசிக்கும் மக்கள், இசைக் கலைஞர்களாக இருந்தனர். அவ்வழியாக கப்பல்களில் செல்லும் பயணிகள் இசையில் மயங்கி அத்தீவில் இறங்குவர். அவர்களை உபசரிக்க, தீவின் மக்கள் மது கொடுப்பர். அதைக் குடித்ததும் மயக்கமாகும் போது, அவர்களின் உடமைகளை மக்கள் கொள்ளையடிப்பர். இதைக் கேள்விப்பட்டிருந்தார் உலைசஸ் என்னும் மாலுமி. ஒருமுறை தீவின் வழியாகக் கப்பலில் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பயணிகளை காப்பாற்றும் கடமை உணர்வு சிந்திக்க வைத்தது. பயணிகளின் காதுகளில் மெழுகு வைத்து அடைக்க பரிந்துரைத்தார். தன்னையும் பாய்மரத்தோடு சேர்த்துக் கட்டிக் கொண்டார். கப்பல் தீவைக் கடந்து உரிய இடத்தை அடைந்தது. இந்த மாலுமி போல உலக கவர்ச்சிகளில் சிக்காமல் அறிவை பயன்படுத்தி வாழ்க்கை என்னும் கடலில் நாம் பயணிப்போம்.