உன்னை நீயே அறிந்து கொள்
* உன்னை நீயே அறிந்து கொள். குறைகளை திருத்திக் கொள். அது உன் வளர்ச்சிக்கான வழி.
* எண்ணம், சொல், செயலால் உண்மையை பின்பற்று; எப்போதும் நற்செயலில் ஈடுபடு.
* மன வலிமை, நல்ல புத்தி, மகிழ்ச்சி போன்ற பண்புகள் அமைதியில் இருந்தே உருவாகின்றன.
* பாவம் செய்தவன் தினையளவு நன்மை செய்தால் அவனுக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.
* பகைவரை விட, பலவீனமான எண்ணங்களே ஆபத்தானவை.
* ஒழுக்கமே மகிழ்ச்சியின் திறவுகோல். ஒழுக்கமுடன் வாழ்வது அவசியம்.
* வாய்ப்பு ஒருபோதும் காத்திருக்காது. நற்செயலை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் உடனே செய்.
* கடவுளுக்கு அடிமையாக வாழ்வதே சொர்க்கம். அவரை மறப்பது நரகத்தை விடக் கொடியது.
* கடவுள் நம் மனதில் குடியிருக்கிறார். கடமை யாற்றுவதே அவருக்கான வழிபாடு.
* காவியுடைக்கு மதிப்பளி. ஆனால், அதை அணிந்திருக்கும் நபரை பொறுத்து.
* எந்த சூழ்நிலையிலும் மன அமைதியை இழக்க அனுமதிக்காதே.
* கடவுளை அறிந்தவர்கள், தூய்மையான இன்பத்தை அறிந்தவர்கள்.
* கடவுளை அடைய, பக்தியே எளிய வழி.
* கடவுளின் கையில் நல்ல கருவியாக இருப்பதை விட பெருமை வேறில்லை.
* எங்கே நல்ல முடிவு ஏற்படுகிறதோ, அங்கே நல்ல தொடக்கமும் இருக்கும்.
* பேராசை, ஆணவம் இல்லாதவர்களின் வாழ்வில் துன்பம் குறுக்கிடுவதில்லை.
* ஒரு எறும்பின் உயிரை காப்பாற்றுவது ஒரு பேரரசை நிறுவுவதை விட உயர்ந்த செயலாகும். - சொல்கிறார் அரவிந்தர்