உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடையில் ஆவணி அவிட்ட வைபவம்

காரமடையில் ஆவணி அவிட்ட வைபவம்

காரமடை:காரமடையில் ஆவணி அவிட்ட, தினத்தை முன்னிட்டு பூணுால் அணியும் வைப வம் நடந்தது.பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரம் இணைந்த நாளில், பிரம்மாவுக்கு வேதம் கிடைத்தது. இந்நாளில் பிராமணர்கள் வேதம் கற்க துவங்கினர். அதனால் அன்றைய தினத்தை ’உபாகர்மா’ என்றழைக்கப்பட்டது.

இந்நாளில் புதிதாக பூணுால் அணிந்து, வேதத்தை கற்க துவங்கி, வேதகால ரிஷிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தர்பணம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று (ஆக., 15ல்), நடந்தது. காலையில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், காலசந்தி பூஜை, புன்னியாக வசனம், முடிந்து உற்சவர் ஸ்ரீ ரங்கநாதருக்கு பூணுால் அனுவிக்கப்பட்டது.

பின்னர் திருக்கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், உள்ளிட்ட ஏரளாமானோர் தாயார் மண்ட பத்தில் அமர்ந்து, பூணுால் மாற்றிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !