திருப்பூர் ஆவணி அவிட்டம் கோவிலில் பிரார்த்தனை
ADDED :2288 days ago
திருப்பூர்:பவுர்ணமியுடன் கூடிய அவிட்ட நட்சத்திர நாளான நேற்று (ஆக., 15ல்), ஆவணி அவிட்ட சடங்குகளும், பூணுால் மாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.ஆவணி அவிட்டத்தின் போது, சடங்கு உபநயணம் செய்து கொண்ட பிராமணர்கள், பூணுால் மாற்றும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
ஆவணி மாதத்தில், பவுர்ணமிக்கு முந்தைய நாளிலேயே அவிட்ட நட்சத்திரம் வியாபித்து விடுகிறது. ஆடி மாதமாகிய இம்மாதம், பவுர்ணமி நிதியும், அவிட்ட நட்சத்திரமும் நேற்று ஒரே நாளில் வந்ததால், நேற்றே, ஆவணி அவிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில் குளங்கள், கோவில் வளாகங்களில், ஆவணி அவிட்ட சடங்குகள் நடந்தன. கோவில்களில் நடந்த நிகழ்ச்சியில், பிராமணர்கள், சம்பிரதாய முறைப்படி, பூணுால்களை மாற்றி, பாராயணம் ஓதி, தனது முன்னோர்களையும், இறைவனையும் வழிபட்டனர்.