உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பெண்களால் உதவி

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பெண்களால் உதவி

இந்த மாதம் புதன் 4ம் இடத்தில் இருந்து நன்மைகளை வாரி வழங்குகிறார். அவர் ஆக. 21ல் சிம்ம ராசிக்கு செல்வதால் அவரால் நற்பலன் கொடுக்க முடியாது. ஆனால் அவர் செப்.7 ல் கன்னி ராசிக்கு செல்வதால் நற்பலன் கொடுப்பார். அதே போல் சுக்கிரன் தற்போது 5-ம் இடத்தில் இருந்து நன்மை தருகிறார். அவர் செப்.10ல் கன்னி ராசிக்கு சென்றாலும் நற்பலனைக் கொடுப்பார். ராகுவால் தொடர்ந்து நன்மை கிடைக்கும். அவரால் செயலில் வெற்றி,  பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் விருத்தி ஏற்படும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பானதல்ல. அவரது 7-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. அந்த வகையில் இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வையால் முறியடிப்பீர்கள். மனதில் துணிச்சல் பிறக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.  குடும்பத்தில் சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பணவரவு அதிகரிக்கும்.  மனதில் பக்தி எண்ணம் மேம்படும். புதனால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். ஆக.21க்கு பிறகு வீண் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம்.  தம்பதியிடையே  மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. செப்.7க்கு பிறகு எடுத்த முயற்சி வெற்றி அடையும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். ஆக.28,29ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். அதே நேரம் செப்.12,13,14ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆக.21,22,செப்.17ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.  

பணியாளர்கள் நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலர்  பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆனால் ஆக.21க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அனைவரிடமும் அனுசரித்து போகவும். குரு பார்வையால் பணியில் உயர்வை தருவார். செப்.7க்கு பிறகு புதிய பதவி தேடி வரும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். செப்.10,11ல் சந்திரனால் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.

வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் சீராக இருக்கும். லாபத்திற்கு குறைவிருக்காது. போட்டியாளர்களின் தொல்லை இருக்கும்.  புதிய தொழில் முயற்சி சுமாரான நிலையில் இருக்கும்.  செப்.1,2ல் எதிர்பாராத பணவரவு  இருக்கும். போட்டியாளர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும்.  கலைஞர்களுக்கு சுக்கிரன் 5-ல் இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  வருமானம் அதிகரிக்கும். செப்.10க்கு  பிறகு  முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்பிற்கு ஏற்ற பலனை பெற முடியாமல் போகலாம்.

மாணவர்கள் புதனால் பல்வேறு நன்மை கிடைக்கப் பெறுவர். ஆக.21 முதல் செப்.7 வரை விடாமுயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.  விவசாயிகளுக்கு சுமாரான வருமானம் கிடைக்கும். பயறு வகைகள், பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும்.  பெண்கள் கூடுதல் நற்பலனை காண்பர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.செப்.7க்கு பிறகு  சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.

* நல்ல நாள்: ஆக.21,22, 26,27, செப்.1,2,3,4,10, 11,12,13,14,17
* கவன நாள்: செப்.5,6 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,7
* நிறம்: வெள்ளை, நீலம்  

பரிகாரம்:
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிேஷகம்
●  தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
●  வெள்ளியன்று சுக்கிர பகவானுக்கு நெய் தீபம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !