ஈரோடு ராகவேந்திரர் 348வது ஆராதனை விழா
ADDED :2243 days ago
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், காவிரிக்கரை ராகவேந்திரர் கோவிலில், 348வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நிர்மால்ய விசர்ஜனம், வேதபாராயணம், கனகா பிஷேகம், பல்லக்கு, ரத உற்சவம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு திரவிய அபிஷேகங்கள், உபன்யாசம் மஹா தீபாராதனை, மங்கள ஹாரத்தி நடந்தது. ஈரோடு மட்டுமின்றி, மாவட்டம் முழுவதிலும் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராகவேந்திரர் அதிஷ்டான மிருத்திகா பிருந்தாவனத்தை வணங்கினர். இன்றும், நாளையும் இதே முறையில் வழிபாடு நடக்கிறது.