உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி அருகே பெரியாண்டிச்சி அம்மனுக்கு பூக்கூடை அழைப்பு

தர்மபுரி அருகே பெரியாண்டிச்சி அம்மனுக்கு பூக்கூடை அழைப்பு

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, அன்னசாகரம் பெரியாண்டிச்சி அம்மன் கோவில்  திருவிழாவில், நேற்று 16ம் தேதி , அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தர்மபுரி அடுத்த,  அன்னசாகரத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மனுக்கு நேற்று முன்தினம் 15ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, அம்ம னுக்கு புடவை படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று 16ம் தேதி காலை, 7:00 மணிக்கு, அங்காள ம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, இக்கோவிலுக்கு, பூக்கூடை அழைப்பு நடந்தது.

பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வரை, திரளான பெண்கள் பங்கேற்று, பூ கூடைகளை சுமந்து, வீதி உலா வந்தனர். மாலை, 5:00 மணிக்கு, பெரியாண்டிச்சி அம்மன், பல்வேறு வகையான பூக் களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !