உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்ணந்தூர் செல்வ மாரியம்மன் கோவில் திருவிழா

வெண்ணந்தூர் செல்வ மாரியம்மன் கோவில் திருவிழா

வெண்ணந்தூர்: வெண்ணந்தூர், செங்குந்தர் செல்வ மாரியம்மன் கோவில் விழா  நடந்தது. வெண்ணந்தூரில், பிரசித்தி பெற்ற செங்குந்தர் செல்வ மாரியம்மன்  கோவில் உள்ளது. ஆடிமாதம் கடைசி வாரம், தீ மிதி விழா நடப்பது வழக்கம்.  

கடந்த, ஜூலை, 30ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்று இரவு  செல்வ மாரியம் மனுக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. 31 முதல், கடந்த, 11  வரை தினசரி கட்டளைதாரர்கள் உபயத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. 12ல்  பவானி ஆற்றில் இருந்து தீர்த்தத்தை ஊர்வலமாக எடுத்து வந்து அபிஷேகம்  செய்தனர். கடந்த, 13ல் சக்தி அழைத்தல், 14 அதிகாலை அக்னி கரக ஊர்வலம், தீ மிதிவிழா, அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம்  15ம் தேதி பொங்கல் வைத்தல், நீர் மோர், பழரசம் வழங்கப்பட்டன. நேற்று 16ம் தேதி, கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று 17ம் தேதி, மஞ்சள் நீராட்டு திருவீதி உலாவுடன் விழா முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !