உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி சிவராம ஆஞ்சநேயர் கோவில் விழா

பொள்ளாச்சி சிவராம ஆஞ்சநேயர் கோவில் விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சிவராம ஆஞ்சநேயர் கோவிலில், இரண்டாம் ஆண்டு விழா நடந்தது.பொள்ளாச்சி அன்சாரி வீதியில், சிவராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்ததையடுத்து, இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 7:00 மணிக்கு சிறப்பு பூஜை, சுதர்சன ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ணண் ஹோமம் மற்றும் வெண்ணெய், உலர் பழங்களால் சிறப்பு அலங்காரத்தில், ஆஞ்சநேய பகவான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பஜனை நடந்தது. பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டு, அருள்பிரசாதம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !