உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சி: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை யொட்டி, திருச்சி, திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய நகரங்களில்  இருந்து, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்க ப்பட உள்ளன. திருவனந்தபுரத்தில்  இருந்து, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு வரும், 28 மற்றும் செப்., 4ல் சிறப்பு  கட்டண ரயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  இருந்து இரவு, 7:45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை, 10:05  மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். அதே போல் வரும், 29, செப்., 5ல்  வேளாங்கண்ணி யில் இருந்து, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்  இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியில் இரவு, 11:45 மணிக்கு புறப்படும் ரயில்,  மறுநாள் பிற்பகல், 1:15 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து செப்., 8ல், பிற்பகல், 1:30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் மாலை, 5:45 மணிக்கு வேளாங்கண்ணி  சென்றடையும். வரும், 29 மற் றும் செப்., 5ல் எர்ணாகுளத்தில் இருந்து  வேளாங்கண்ணிக்கும், மறு மார்க்கத்தில், வரும், 30 மற்றும் செப்., 6ல்  வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்துக்கும் சிறப்பு கட்டண ரயில்  இயக்கப்படும் என்று, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !