உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிக்கல் தர்ம முனீஸ்வரர் கோயிலில் வழிபாடு

சிக்கல் தர்ம முனீஸ்வரர் கோயிலில் வழிபாடு

சிக்கல் : மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது.  நேர்த்திக்கடன் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும், கோயில் முன்பு  கூட்டுப்பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர்.

கோயில் முன்புறம் உள்ள விளையாட்டுத்திடலில் 20 காளை மாடுகள் பங்கேற்ற எருது கட்டு நடந்தது.  

காளையின் கழுத்தில் வடக்கயிறு கட்டியும், மறுபுறத்தில் உள்ளூர் இளைஞர்கள்  15 பேர் வடத்தை இழுத்தவாறு சென்றனர்.மாடுபிடி வீரர்கள் ஆவேசத்துடன்  காளைகளை அடக்கி வெற்றி பெற்றனர். கிராமத்தலைவர் அங்குச்சாமி தலைமை  வகித்தார். கமிட்டி உறுப்பினர் பாக்கியநாதன் முன்னிலை வகித்தார்.  முதுகுளத்துார், சிக்கல், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார  கிராமங்களை சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக  பங்கேற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்கப்பணம், பரிசுகள்  வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !