காஞ்சிபுரத்தில் மறைஞான சம்பந்தர் குருபூஜை விழா
ADDED :2232 days ago
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், மறைஞான சம்பந்தர் குருபூஜை விழா நடந்தது.ஆவணி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில், பெண்ணாகரத்தில் பிறந்த மறைஞான சம்பந்தர், அருணந்தி சிவாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றவர். சிவதர்மம் என்ற ஆகமத்தின் உத்தரபாகத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்.இவரது குருபூஜை விழா, காஞ்சிபுரம், கச்ச பேஸ்வரர் கோவிலில் நடந்தது. குருபூஜையையொட்டி, மறைஞான சம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, அறுபத்து மூவர் குருபூஜை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.