காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் லட்ச தீப பெருவிழா
காஞ்சிபுரம்:விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், 28ம் ஆண்டு லட்ச தீப பெருவிழா விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று, லட்ச தீப பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 28ம் ஆண்டு லட்ச தீப பெருவிழா நேற்று 2ம் தேதி நடந்ததுவிழாவையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சசந்தி விநாயகருக்கு, மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அபிஷே கம் மற்றும் அலங்காரம் நடந்தது.மாலை, 6:00 மணிக்கு நடந்த லட்ச தீப பெருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, கோவில் குளக்கரை, வெளிபிரகாரம் மற்றும் உட்பிரகாரங்க ளில் தீபம் ஏற்றினர்.காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை உக்கம்பெரும்பாக்கத்தில், நட்சத் திர விருட்ச விநாயகர் கோவிலில், நேற்று 2ம் தேதி காலை, 6.00 மணிக்கு கலச ஸ்தாப னம், கணபதி ஹோமம், 16 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, 1,008 சகஸ்கர நாமாவளி அர்ச்சனை தொடர்ந்து, மகா தீபாரதனைகள் நடைபெற் றது.