திருப்போரூரில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
திருப்போரூர்:திருப்போரூர் பகுதியில் நேற்று 2ம் தேதிவிநாயகர் சதுர்த்தி விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டது.ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் பிரதான விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று 2ம் தேதி திருப்போரூரில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
பல குடியிருப்பு மற்றும் கிராமங்களிலிருந்து கிராமத்தினர் மண்ணாலான விநாயகர் சிலை யை ஆர்வத்துடன் வாங்கினர். எருக்கம் பூ, குடை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்புடன் காணப்பட்டது.திருப்போரூரில் உள்ள வேம்படி விநாயகர், தங்க பிள்ளையார், வினை தீர்த்த விநாயகர், கங்கை விநாயகர், செம்பாக்கத்தில் உள்ள 32 விநாயகர் கோவில்கள், காலவாக்கம் ஸ்ரீ வல்லபை விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம், சுவாமி புறப்பாடு நடந்தது.
காலவாக்கத்தில் உள்ள வல்லபை விநாயகர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு சதுர்த்தி பூஜை யாகமும் நடத்தப்பட்டது.திருக்கழுக்குன்றத்தில் விநாயகர் சதுர்த்தி விழா : திருக் கழுக்குன்றத்தில் உள்ள லட்சுமி விநாயகர், அன்னக்காவடி விநாயகர், சித்தி புத்தி விநாயகர், அரசடி விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி ஒட்டி மகா அபிஷேகம், மலர் அர்ச்னை நடந்தது.
தொடர்ந்து வீதிஉலா வைபவமும் நடந்தது. நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பொது இடங் களில் இந்து முன்னனி அமைப்பினர் சார்பில் 100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினர். மக்கள் மண்ணாலான விநாயகர் சிலை, விநாயகர் கொடை, எருக்க மாலை வாங்கி சென்றனர்.