பேரம்பாக்கத்தில் 21ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா
பேரம்பாக்கம்:பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோவில் வளாகத்தில் 21ம் ஆண்டு விநாய கர் சதுர்த்தி விழா நடந்தது.கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள வைகுண்ட பெருமாள் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது.
இங்கு நேற்று 2ல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் வாசல் முன்பு 9 அடியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சதுர்த்தி விழா நடந்து வருகிறது. நேற்று 2ல் காலை முதல் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. இந்த விநாயகர் சிலை வரும் 8ம் தேதி அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.இதேபோல் பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு நேற்று 2ல் காலை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந் தது. பின், விநாயகர் சிறப்பு மலர், தானியங்கள் மற்றும் கனிகளால் அலங்காரம் செய்ய ப்பட்டு உற்சவர் விநாயகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.