உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கலுார் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்

பொங்கலுார் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்

பொங்கலுார்:பொங்லுார் ஒன்றிய இந்து முன்னணி சார்பில், கொடுவாயில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடந்தது.

பொங்கலூர் வட்டாரத்தில், 55 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று 3ல், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடுவாய் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் துவக்கி வைத்தார்.பெண்கள் சிறிய விநாயகர் சிலைகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், வான வேடிக்கை, பாரதியார் குருகுலம் மாணவர்களின் கலை நிகழ்ச்சி, யோகாசனம் ஆகியனவும் இடம் பெற்றது.அதன்பின், கொடுவாயில் பொதுக்கூட்டம் நடந்தது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் குருகுலம் ராஜேஷ், பி.ஏ.பி.,பாசன சபை தலைவர் கோபால்,ஆர்.பின்.ஆர்., கார் மெண்ட்ஸ் ரத்தினசாமி, ’காட்டன் பார்க்’ சம்பத்குமார், விவித் பேஷன்ஸ் வாசுநாதன், கிருஷ் ணா மெடிக்கல் ஏஜென்சி நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பொதுக்கூட்டம் முடிந்தபின் சிலைகள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு, அலகுமலை ஆன் கோவில் என்ற இடத்தில் உள்ள பாறைக்குழியில், நேற்றிரவு, 9:00 மணிக்கு சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !