உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஓரியூர் சர்ச் தேர்பவனி

திருவாடானை ஓரியூர் சர்ச் தேர்பவனி

திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் சர்ச்சில் உள்ள ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா ஆக.29ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம்(செப்., 7ல்) இரவு 9:00 மணிக்கு தேர்பவனி நடந்தது.

மிக்கேல் அதிதூதர், செபஸ்தியர், சவேரியார், புனித அருளானந்தர், ஆரோக்கிய அன்னை ஆகிய ஐந்து தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், கிராம தலைவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !