மாத்துார் மகாசக்தி மாரியம்மன் தேர் திருவிழா
ADDED :2350 days ago
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், வழிபாடு செய்தனர். மேலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.