மத்யநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2298 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த திருப்பாலப்பந்தல் மத்யநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கடந்த 11ம் தேதி முதல் யாகசாலை பூஜை நடந்து வந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோ பூஜை, ஐந்தாம் கால யாகசாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமம் மற்றும் கடம் புறப்பாடாகி10:15 மணிக்கு மூலஸ்தான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மூலவர் மத்யநாதேஸ்வரர் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடந்தது.விழாவில், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி தலைமையில் போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.