சிதம்பரம் கோவில் தீட்சிதர் சஸ்பெண்ட்
ADDED :2250 days ago
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து பட்டு தீட்சிதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில், பட்டாசு ஆலை அதிபரின் இல்லத் திருமண விழா நடந்தது. சிதம்பரம் கோவிலில் தங்கத்தால் வேயப்பட்ட கூரையின் கீழ் நடராஜர் சன்னதி உள்ளது. இவ்விடத்தில் அவ்வளவு எளிதாக யாரும் செல்லமுடியாது. இப்படியிக்கும்போது, தனியார் ஒருவரின் திருமணத்திற்காக தங்கக்கோபுரம் மீது ஏறியும் ஆயிரங்கால் மண்டப பகுதிகளிலும் தோரணங்கள் கட்டப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து ஆகம விதிகளை மீறயதாக, சிதம்பரம் கோவில் பட்டு தீட்சிதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.