பழநி வரதராஜப்பெருமாள் கோயிலில் தேரோட்டம்
ADDED :2220 days ago
பழநி : பழநி முருகன்கோயிலைச் சேர்ந்த, பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா செப்.,8ல் கொடியேற்றத்துடன் துவங்கி செப்.,18 வரை நடக்கிறது. செப்.,14ல் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இன்று இரவு சஷே வாகனத்தில் பெருமாள் உலா வருகிறார், கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (செப்.,18ல்) விடையாற்றி உற்ஸவத்துடன் விழா முடிவடைகிறது.