பொள்ளாச்சி அழகு நாச்சியம்மன் கோவிலில் விழா
ADDED :2220 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், அழகு நாச்சியம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு விழா நடந்தது.பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், அழகு நாச்சியம்மன் கோவிலில், இரண்டாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு, புனித நீர் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.அழகு நாச்சியம்மனுக்கு வேள்வி பூஜை, சிறப்பு திருமஞ்சனம், வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, கலச நீர் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.