வேதவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
புதுச்சேரி: வி.வி.பி., நகரில் உள்ள வேதவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. வி.வி.பி., நகர் என்றழைக்கப்படும் வேதபுரீஸ்வரர் வரதராஜப் பெருமாள் நகரில் அமைந்துள்ள வேதவிநாயகர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை கடந்த 13ம் தேதி மகா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.
யாகசாலையில் நான்காம் கால பூஜை நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. 9:30 மணிக்கு, கடம் புறப்பாடாகி, வேதவிநாயகர் மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வி.வி.பி., நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மூலவர் வேதவிநாயகருக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. மாலையில், சுவாமி வீதியுலா நடந்தது.