வெட்கப்படுதல் நல்ல குணம்
ADDED :2258 days ago
உண்மையை மறைக்கவும், லஞ்சம் வாங்கவும், பெண்களை ஏமாற்றவும் சிலர் வெட்கப்படுவதில்லை. ஆனால் மனிதனுக்கு வெட்கம் அவசியம். ”நாணம் என்னும் நற்பண்பு நன்மையை மட்டும் தருகிறது,” என்கிறார் நாயகம். கேவலம் வந்தால் என்ன! நமக்கு தேவை பணம் தான் என அஞ்சாமல் ஒரு கூட்டம் சம்பாதிக்கிறது. யார் வாழ்க்கை எப்படி போனால் என்ன... நான் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக பொய், பித்தலாட்டம் செய்பவர்கள் பெருகி விட்டனர். இப்படிப்பட்டவர்கள் வெட்கப்பட்டு தங்களை திருத்திக் கொள்ளாவிட்டால் இறைவனால் தண்டிக்கப்படுவர்.