தம்பதி ஒற்றுமைக்கு .....
ADDED :2241 days ago
தமிழ் மாத கடைசி செவ்வாயன்று பெண்கள் மேற்கொள்வது பராசக்தி விரதம். விரதத்தை துவங்கும் முன் விநாயகரை வழிபடுங்கள். செம்பருத்தி, அரளிப்பூக்களை அம்மனுக்கு அணிவித்து பால், வாழைப்பழம், வெற்றிலையுடன் பாக்கு படைத்து வழிபட வேண்டும். அன்னதானம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும். சுமங்கலி பாக்கியம் உண்டாவதோடு தம்பதி கருத்து வேறுபாடும் மறையும்.