எண்ணியது நிறைவேற 21 முறை வலம் வாங்க!
ADDED :2285 days ago
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ’எலுமினியன் கோட்டூர்’ எனப்படுகிறது. தேவலோக பெண்ணான ரம்பா வழிபாடு செய்த சிவலிங்கம் சுயம்புமூர்த்தியாக இங்கு உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி வலது கையால் சின்முத்திரை காட்டியபடி, கையை மார்பில் நிறுத்தி இருக்கிறார். மேலும் இவர் கைகளில் சூலம், ருத்ராட்ச மாலை தாங்கியிருக்கிறார். தொடர்ந்து மூன்று வியாழக்கிழமையில் இவரை தரிசிக்க கல்வி வளர்ச்சி ஏற்படும். இக்கோயிலை 21 முறை வலம் வந்தால் எண்ணியது நிறைவேறும்.