துர்க்கை அலங்காரத்தில் சிவலோகநாயகி அம்மன்
ADDED :2230 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நவராத்திரி விழாவில், சிவலோகநாயகி அம்மன், துர்க்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நவராத்திரி விழாவை ஒட்டி, நேற்று முன் தினம் காலை 10.00 மணிக்கு வேள்வியும், 11.00 மணிக்கு திருமஞ்சன வழிபாடு நடந்தது.பின், பிற்பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜையை தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு சிவலோநாயகி அம்மனுக்கு, துர்க்கை அலங்காரம் செய்து, தீபராதனை காண்பிக்கப்பட்டது.இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.