லலிதா சகஸ்ர நாமம் பிறந்த கதை
ADDED :2562 days ago
அகத்திய முனிவர் விஷ்ணுவை நோக்கி தவம் புரிந்தார். குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவராக, விஷ்ணு அகத்தியர் முன் எழுந்தருளினார். அவரிடம் அகத்தியர், பாவத்தில் இருந்து மக்கள் விடுபட வழி கேட்டார். அதற்கு ஹயக்ரீவர், “ஜகன்மாதாவான பராசக்தியின் அருட்கோலமான லலிதாம்பிகையை வழிபட்டால் துன்பம் தீரும்” என்று சொல்லி அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை (பெயர்கள்) உபதேசித்தார். அதுவே லலிதா சகஸ்ர நாமம் என பெயர் பெற்றது.