சந்திரமவுலீஸ்வரருக்கு பால்குட ஊர்வலம்
ADDED :2521 days ago
படுநெல்லி: படுநெல்லி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், பால் குட ஊர்வலம் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பக்தர்கள் பால் குடம் எடுக்கும் விழா நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், பால் குடம் எடுத்து, ஊர்வலம் சென்றனர். சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் புறப்பட்டு, பெரிய பாளையத்தம்மன் கோவில் வழியாக, புத்துக்கோவிலை சென்றுஅடைந்தது. புத்துக்கோவில் மற்றும் சந்திரமவுலீஸ்வரருக்கு, சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடந்தன.