உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், புரட்டாசி கிருத்திகை விழா, நேற்று நடந்தது.திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மாதம்தோறும், கிருத்திகை விழா விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், புரட்டாசி இரண்டாவது கிருத்திகை விழா, நேற்று நடந்தது.பிரார்த்தனையாக மொட்டையடித்த பக்தர்கள், சரவண பொய்கை குளத்தில் நீராடினர். தொடர்ந்து, கந்தசுவாமியை வழிபட்டனர்.முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, மூலவர் கந்த சுவாமிக்கு மஹா அபிஷேகமும், மயில் வாகனத்தில் உற்சவர் வீதியுலா வைபவமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !