திருக்கோவிலூரில் தெப்பல் உற்சவம்!
ADDED :4980 days ago
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக தெப்பல் உற்சவம் நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த 29ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் ஆஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி ராகவேந்திர மடத்தை அடைந் தார். மண் டகப்படி, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு புறப்பாடாகி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் மேளதா ளங்கள் முழங்க பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் தெப்பத்தில், குளத்தை மூன்றுமுறை வலம் வந்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.