உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவில் மண்டப பணி துவக்க விழா!

முருகன் கோவில் மண்டப பணி துவக்க விழா!

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த அகரம் முருகன் கோவில் மஹா மண்டப திருப்பணி துவக்கி விழா நாளை (ஏப்., 11) நடக்கிறது.காரிமங்கலம் அடுத்த அகரத்தில் பழமையான முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மஹா மண்டபம் பழுதடைந்ததால் அதை பக்தர்கள் உதவியுடன் புதியதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி துவக்க விழா நாளை காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பணிகள் துவங்கப்படுகிறது.மஹா மண்டப திருப்பணி துவக்க விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வதுடன் திருப்பணிக்காக தாராளமாக நிதி வழங்கிட கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் தண்டபாணி, கோவில் ஆய்வாளர் சங்கர், திருப்பணி குழு உறுப்பினர்கள் மணி, பழனி, ராமசாமி, சண்முகம், நடராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !