உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரக சிலை கண்டெடுப்பு!

நவக்கிரக சிலை கண்டெடுப்பு!

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை மணத்தட்டை எல்லரசி பாலம் தென்கரை பாசன வாய்க்காலில் கடந்த 7 ம் தேதி மதியம், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலில் சனீஸ்வரர் சிலை உள்பட எட்டு நவக்கிரஹ சிலைகளை பொதுமக்கள் கண்டெடுத்தனர். தகவல் அறிந்த ஆர்.ஐ., வெங்கடேஷ், வி.ஏ.ஓ., குமாரபாண்டியன் ஆகியோர் நவக்கிரஹ சிலைகளை, குளித்தலை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்று வைத்துள்ளனர். அதை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.வாய்க்காலில் நவக்கிரஹ சிலைகள் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !