ஆண்டாள் கோயிலில் மன்னர் வம்சத்தினர் தரிசனம்
ADDED :2228 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கேரளாவின் அவிட்ட திருநாள் மன்னர் வம்சத்தை சேர்ந்த ஆதித்யவர்மா மற்றும் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.
நேற்று மாலை மணவாளமாமுனிகள் சன்னிதி வந்த ஆதித்யவர்மா சடகோபராமானுஜ ஜீயரிடம் ஆசிபெற்றார். கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. ஆண்டாள் மற்றும் வடபத்ரசயனர் சன்னதிகளில் தரிசனம் செய்தார். விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி சரவணகார்த்தி உடனிருந்தார்.